சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி- காலா படத்தை வாங்கிய முன்னணி தொலைக்காட்சி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் காலா. இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏப்ரல் 27-ம் தேதி ரிலீசாக இருந்த இந்த படம் தமிழ் சினிமா ஸ்ட்ரைக்கால் ஜூன் 7-ம் தேதி தள்ளி போவதாக தனுஷ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஸ்டேடிலைட் உரிமையை மிக பெரிய தொகையை கொடுத்து முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]