சூப்பர் சுவையில் வட்டலப்பம் – இதோ ரெசிபி!

சூப்பர் சுவையில் வட்டலப்பம் – இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்:

  • தேங்காய் பால்(முதல் பால்) – அரை கப்
  • முட்டை- 05
  • சீனி – 250 கிராம்
  • கஜூ – 30 கிராம்
  • பிளம்ஸ் – 30 கிராம்
  • ஜாதிக்காய் தூள் – அரை தேக்கரண்டி
  • மாஜரின் – ஒரு தேக்கரண்டி
  • ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை:

தேங்காய் பாலில் சர்க்கரை சேர்த்து கரைத்து, பின்னர் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.

எல்லா முட்டைகளையும், ஒரு பாத்திரத்தில் அடித்து ஊற்றவும்.

முட்டைகளை  நன்றாக நுரைக்கும்படி, அடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில், மாஜரின் பூசி, அதன்மேல் சீனி கலந்த பாலையும்,அதனுடன் கஜூ, ஏலக்காய், பிளம்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர், அக்கலவையுடன், அடித்து வைத்த முட்டையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அக்கலவையை, நீராவியில் வைத்து அவித்து எடுக்கவும்…

இதோ உங்கள் நாவிற்கு சுவையான வட்டிலப்பம் தயார்..!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]