சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனின் செயலால் அதிர்ந்துபோன ரசிகர்கள்!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் விளையாடி அசத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்கயிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அண்மையில் சிம்பு, ராதா, விஜய் ஆண்டனி, கிருத்தா உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டார்.

 

இந்த நிலையில், இவர்கள் வரிசையில், இந்த வாரம் சூப்பர் ஹீரோ சிவகார்த்திகேயனும் கலந்து கொள்ளயிருக்கிறார். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான இவர், சூப்பர் சிங்கர் செட்டில் கிரிக்கெட் விளையாடி பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இவருடன் இணைந்து பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் என்று பல திறமைகளை கொண்ட அருண்ராஜா காமாராஜூம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]