சூப்பரான வெஜ் பாஸ்தா! ரெசிபி இதோ!…

சூப்பரான வெஜ் பாஸ்தா! ரெசிபி இதோ!…

தேவையான பொருட்கள்:

  • பாஸ்தா – 500 கிராம்
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • கேரட் – 1 (நறுக்கியது)
  • குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
  • பூண்டு பேஸ்ட் – 1 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • தக்காளி சாறு – 4 டேபிள் ஸ்பூன்
  • சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மாங்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • சீரகப்பொடி – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • தண்ணீர் – 4 கப்

செய்முறை:

முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு, அதில் பாஸ்தாவை போட்டு, எண்ணெய் மற்றும் சிறிது உப்பை சேர்த்து, நன்கு கலக்கி, மூடி, சிறிது நேரம் வேக வைக்கவேண்டும்.

பின், நீரை வடிகட்டி, பிறகு குளிர்ந்த நீரால் ஒரு முறை அலச வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் மற்றும்  குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கள் அனைத்தும் ஓரளவு வெந்ததும், அதில் சிறிது உப்பை போட்டு, சிறிது நேரம் வேக வைக்கவும்.

பின்னர் அதில் தக்காளி சாறு, கரம் மசாலா தூள், சீரகப் பொடி, மிளகாய் தூள், மாங்காய் பொடி, மிளகுத் தூள் மற்றும் சில்லி சாஸ் விட்டு நன்கு கிளறவும். அனைத்துப் பொருட்களும் நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் பாஸ்தாவை போட்டு, நன்கு 5 நிமிடம் கிளறி, பின் அதனை இறக்கவும். சுவையான பாஸ்தா ரெடி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]