சூப்பரான பேரீச்சம்பழ ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

சூப்பரான பேரீச்சம்பழ ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

எழுமிச்சை ஊறுகாய் சாப்பிட்டிருப்போம்.அந்தவகையில் இன்று வீட்டில் செய்யக்கூடிய பேரீச்சம்பழ ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

பேரீச்சம்பழம் – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
வினிகர் – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 5 பல்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயத்தூள் – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

* பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நறுக்கிய பேரீச்சம் பழத்துடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பூண்டு சேர்த்து வறுக்கவும்.

* பிறகு, ஊறவைத்த பேரீச்சக் கலவையைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மென்மையான கூழ் போல ஆகும்வரை வதக்கவும். நன்றாக கூழ் பதம் வந்தவுடன் இறுதியாக வினிகர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

* ஆறிய பிறகு சுத்தமான பாட்டிலில் சேகரித்து வைத்து பரிமாறவும். தற்போது சூப்பரான பேரீச்சம்பழ ஊறுகாய் ரெடி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]