சு.க அமைச்சர்கள் தொடர்பிலான அதிரடி உண்மை விரைவில் அம்பலம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்கள் குறித்த உண்மைகளை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பு தினத்தன்று ஜனாதிபதியுடன் பேசி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அதே தினம் மாலை நேரத்தில் செயற்பட்டதற்கு காரணம் என்னவென்பதை தாம் நாட்டுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய 16 பேரும் தற்போதைய ஸ்ரீ ல.சு.க. செயலாளரையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் விதத்திலேயே துமிந்த திஸாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]