சுவையான சேமியா முட்டை பிரியாணி ரெசிபி இதோ!..

சுவையான சேமியா முட்டை பிரியாணி ரெசிபி இதோ!..

தேவையான பொருட்கள்:

  • சேமியா – 1 கப்
  • நெய் – 3 டீஸ்பூன்
  • பட்டை – 2
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • முட்டை – 1
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.

இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். கொதித்த பிறகு, சேமியாவை சேர்க்க வேண்டும். நன்கு வெந்தபிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சேமியா முட்டை பிரியாணி ரெடி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]