சுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி?

சுவையான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி?
சூப்பரான ஆட்டு மூளை பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தேவையான பொருள்கள்

ஆட்டு மூளை – 2
மிளகாய்தூள் – 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
ப.மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
வெங்காயம் – 1
வெங்காயம் – 1/2 கப்
சோம்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

*வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

*ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் ஊற்றி மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடிபிடித்து விடும்.

*மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

*பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம்.ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

*வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேக வைத்த மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

*மசாலா அனைத்து ஒன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம். சூப்பரான ஆட்டு மூளை பொரியல் ரெடி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]