சுவீட்சலாந்து சுற்றுலா பயணி மரணம்

சுவீட்சலாந்து நாட்டிலிருந்து இலங்கை வந்திருந்த உல்லாச பிரயாணி எல்ல பகுதியின் விடுதியொன்றில் தங்கியிருந்த வேளையில், மர்மமாக மரணமாகியுள்ள சம்பவம், இன்று இடம்பெற்றிருப்பதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சுவீட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெரி சோக்கர் என்ற 70 வயது உல்லாசப் பிரயாணியே, மரணமாகியுள்ளார்.

எல்ல நகரின் ‘திசிவிலா’ என்ற உல்லாச விடுதியில் மூன்று தினங்களுக்கு தங்க வந்த, இவ் உல்லாசப்பிரயாணி, இரு இரவுகள் தங்கியுள்ளார்.

மறுதினம் அறையை விட்டு அவர் வெளியே வராததால், விடுதி காப்பாளர் அறையை பரிசீலனை செய்யும்போது, அவர் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து, எல்ல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும், பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து, புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]