சுவிஸ் தலைநகரான பெர்னில் தீவிரவாத அச்சுருத்தல்

சுவிஸ் தலைநகரான பெர்னில் பிரதான ரயில் நிலையத்தின் நுழைவாயிலுக்கருகில் அந்நாட்டு பொலிஸார் குண்டு அச்சுறுத்தல ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.


சுவிஸ் பொது தொலைக்காட்சியின் செய்திகளின் படி ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தின் உள்ளே சந்தேகத்திற்க்கு இடமான பொருட்கள் இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார் என்றும் செய்திகளை வெளியிட்டுயிருக்கிறது.ஸ்பிரிட் தேவாலயம் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியில் இருக்கிறது என்று மாறு பட்ட கருத்தினை அதன் செய்திகள் குறிப்பிடுகின்றன.


மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொலிஸார் அறிவிப்பு வரும் வரை ஸ்பிரிட் திருச்சபை மூடப்படும் என்றும், வழமை போல ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவித்திருக்கிறது .

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]