சுவிஸ்குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரனை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ்குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரனையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு மன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு பிரிவு இவ் அறிக்கையை சமர்பித்திருந்த்து.

இதனையடுத்து குறித்த வழக்கில் முதலாவது சந்தேகநபரான லலித்ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் ஒவ்வொரு மாதமும் கையொப்பம் இட வேண்டிய நிபந்தனையை தளர்த்துமாறு அவர் தரப்பு சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை ஏற்ற மன்றானது அவ் நிபந்தனையை தளர்த்தி இனிமேல் லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் கையொப்பம் இட தேவையில்லை என மன்று பணிப்புரை பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜீன் மாதம் 20ஆம் திகதி ஒத்தீவைத்து நீதிவான் றியால் உத்தரவிட்டார்.