சுவிஸில் அடைக்கலம் கோருபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

சுவிஸில் அடைக்கலம்

சுவிஸில் அடைக்கலம் கோருபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

சுவிற்சர்லாந்துக்கு அடைக்கலம் தேடி செல்வோரின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் வெகுவாக குறைந்துள்ளதாக, அந்நாட்டு குடிவரவு – குடியகழ்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை, 33.5 வீதத்தினால் குறைந்துள்ளதுடன், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடைக்கலம் கோரி ஆகக் குறைந்த விண்ணப்பங்கள் கடந்த ஆண்டிலேயே கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு எரித்ரியாவைச் சேர்ந்தவர்களே ( 3,375) அதிகளவில் சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளனர். எனினும், இது முன்னைய ஆண்டை விட 35சதவீதம் குறைவாகும்.

சிரியாவில் இருந்து 1,951 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இது 9சதவீதம் குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 1,217 பேர் அடைக்கலம் கோரியுள்ளனர். இது 62சதவீத வீழ்ச்சியாகும். துருக்கியில் இருந்து 852 பேர் சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளனர். கடந்த ஆண்டை விட இது 62 சதவீதம் அதிகரித்துள்ளது.

சோமாலியாவில் இருந்து 843 பேர் அடைக்கலம் கோரியுள்ளனர். அதையடுத்து, இலங்கையில் இருந்து 840 பேர் சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளனர். இது 38.8 சதவீத வீழ்ச்சியாகும் என, அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]