சுவிஸிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த 22 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி அநுராதபுரத்தில் இரவுநேரக் களியாட்டங்களில் கலந்துகொண்டு விட்டு, பின்னர் தான் தங்கியிருந்த விடுதிக்கு செல்ல முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு நிறுத்தி அதில் ஏறியுள்ளார். அச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மாணவியை விடுதிக்கு அழைத்துச் செல்லாமல் வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதி குறித்த சுவிஸ் மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திவிட்டு அநுராதபுரம் பஸ் நிலையத்திற்கு அருகில் கொண்டு சென்று விட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சுவிஸ் மாணவி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்த நிலையில், விரைவாக செயற்பட்ட பொலிஸார், குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதி விசாரணைகளையடுத்து கைது செய்யப்பட்ட நபர் அநுராதபுரம் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]