சுவாதியும் நானும் நண்பர்கள் மட்டுமே: கிருஷ்ணா பேட்டி

‘கழுகு’, ‘யாமிருக்க பயமேன்’,‘யட்சன்’,‘யாக்கை’, சமீபத்தில் வெளியான ‘பண்டிகை’ படங்களில் நாயகனாக நடித்திருப்பவர் கிருஷ்ணா. இவர் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி. திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள கிருஷ்ணாவுக்கும் நடிகை சுவாதிக்கும் அதிக நெருக்கம் இருப்பதாக கூறப்பட்டது.

இது பற்றி கேட்ட போது கிருஷ்ணா அளித்த பதில்… “என்னுடன் நடித்த நடிகைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் ‘சுவாதி’.

கள்ளம் கபடம் இல்லாமல் அவர் ஜாலியாக பழகுவார். என்னைப்போலவே எப்போதும் சுறுசுறுப்பானவர். அவருக்கும் தெற்றுப்பல் எனக்கும் தெற்றுப்பல். அவருக்கும் பெரிய கண்கள். எனக்கும் பெரிய கண்கள். இப்படி பல வி‌ஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப்போவதால் நல்ல நண்பர்களாகி விட்டோம்.

‘யாக்கை’ படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது நல்ல பொருத்தம் இருந்தது. சுவாதி சென்னைக்கு வந்தால் எங்கள் வீட்டுக்கு வருவார். எங்க அம்மா கையால் சாப்பிட்டுவிட்டு செல்வார். அந்த அளவுக்கு குடும்ப நண்பர் ஆகிவிட்டார். இப்போதும் சுவாதியும் நானும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]