சுவாசிக்க முடியாத நிலையில் நெரிசலாக அடைக்கப்பட்டிருந்த எருமை மாடுகளை ஏறாவூர் பொலிஸார் கைப்பற்றினர்!!

அநுராதபுர மாவட்டம் – மொறவெவ பிரதேசத்திலிருந்து அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனை பகுதிக்கு சிறிய ரக லொறியில் கொண்டு செல்லப்பட்ட எட்டு எருமை மாடுகளை ஏறாவூர் பொலிஸார் 24.04.2018 அன்று கைப்பற்றியுள்ளனர்.

அந்த லொறியின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிருகங்களுக்கு வதையூட்டிய குற்றச்சாட்டின்கீழ் இவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய போதைவஸ்து தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்பீஜீஜீஎஸ். சத்துரங்க தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்து திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியினூடாக சென்று கொண்டிருந்த லொறி ஏறாவூர் பிரதேசத்தில் வழிமறித்து சோதனையிடப்பட்டது. அப்போது அந்த லொறியில் நான்கு ஆண் எருமை மாடுகளும் நான்கு பெண் எருமை மாடுகளும் அடைத்துக்கொண்டு சென்றமை கண்டறியப்பட்டது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]