சுவர் இடிந்துவிழுந்ததில் 9வயது சிறுமி பரிதாப பலி!!

சாத்தான்குளம் அருகே உள்ள கந்தன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகள் 9 வயதுடைய மெர்லின்.

மெர்லின் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமி வீட்டின் முன்பு உள்ள சுவற்றில் பிளாஸ்டிக் கயிறு கட்டி ஊஞ்சல் விளையாடியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக்கயிறு கட்டப்பட்டிருந்த சுவர் இடிந்து சிறுமி மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி மெர்லின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த சாத்தான்குளம் பொலிசார் விரைந்து வந்து பலியான சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ்அதிகாரி ரேனியஸ் ஜேசுபாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]