சுவரொட்டிகளை ஒட்டிய இளைஞர்கள் கைது

இளைஞர்கள் கைது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை வேட்பாளரின் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். கந்தர்மடம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் இன்று அதிகாலை தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய போதே ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் அவர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என்றும் இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.