சுவரொட்டிகளை அகற்ற 230 மில்லியன் ரூபாய் நிதி

உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக 230 மில்லியன் ரூபாய் நிதி, தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிஸாருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி காரியாலங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காட்சி படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளையே அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.