சுழிபுரம் சிறுமியின் படுகொலை; இருவர் விளக்கமறியலில்

யாழ். வட்டுக்கோட்டை – சுழிபுரத்தில் ஆறு வயது பாடசாலை சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் இருவரையும் அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]