சித்தியடைந்தும் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சித்தியடைந்தும் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள்

சுற்று நிருபத்திற்கு முரணாக முறைகேடான நியமனம் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் 1749 பேர் சார்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு அந்த ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு முரணான வகையில் முறைகேடான நியமனங்களை வழங்கியுள்ளதாகவும் இதற்கு நியாயம் பெற்றுத் தருமாறும் கோரி போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் 1749 பேர் சார்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ். தெரிவித்தார்.

புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள்

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை 03.12.2017 விவரம் தெரிவித்த அப்துல் அஸீஸ் மேலும் கூறியதாவது,

சமீபத்தில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவது சம்பந்தமான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள அதேவளை நியமனம் வழங்கப்படாது தாம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் பட்டதாரிகள் 1749 பேர் சார்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் பட்டதாரிகளின் முறைப்பாடு குறித்து தாம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரியிருப்பதாக அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் பட்டதாரிகளினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏற்கெனவே அரச சேவையிலுள்ளவர்கள் புதிய ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட மாட்டார்கள் என கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தும் அந்த சுற்று நிருபத்திற்கு முரணான வகையில் ஏற்கெனவே அரச சேவையிலுள்ளவர்கள் புதிய ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.

புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள்

இது வேலையற்ற நிலையில் பரீட்சையில் சித்திடைந்து வேலை வாய்ப்பை ஆவலோட எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருக்காத புதிய விடயமாக கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆசிரியர் தேர்வுக்காக வெவ்வேறான வெட்டுப் புள்ளிகளும், அதேவேளை ஒவ்வொரு பாடத்திற்குமாக வெவ்Nறு வெட்டுப் புள்ளிகளும் என்ற அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவும் வெளிப்படையாகக் கூறப்படாது முறைகேடாகத் தீர்மானிக்கப்பட்ட மறைமுக அநீதியாகும்.

மேலும், ஆளணி வெற்றிடங்கள் வெளிப்படையதாகத் தெரிவிக்கப்படாது மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் விடயதானத்திற்குப் பொருத்தமில்லாத ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

உதாரணமாக பொருளியல் துறை விஷேட பட்டதாரிக்கு தமிழ் இலக்கிய பாடவிதானம் வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்று பொருத்தமில்லாத பாடவிதானங்களுடனும் குளறுபடியான விதத்திலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எனவே இவற்றையெல்லாம் சீர் செய்து நியமனம் வழங்காது அநீதி இழைக்கப்பட்ட 1749 பட்டதாரிகளுக்கும் நியாயம் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள்புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள்புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]