சுற்றுலா விடுதி ஒன்றில் இருந்து தவறிவிழுந்து சீன பெண் நுவரெலியாவில் பலி

நுவரெலிய, மாகஸ்தொட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இருந்து விழுந்து வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுற்றுலா விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

34 வயதுடைய சீனா நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை குறித்த விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து இயற்கையை இரசித்து கொண்டிருந்த போது தவறுதலாக விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]