சுற்றுலா சென்று திரும்பியவர்களுக்கு ஏற்பட்ட கதி

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

மகியங்கனை – பதியத்தலாவை பிரதான வீதியில், தம்பான 91ஆவது மைல்கல் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றை முந்திச் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]