முகப்பு Travel சுற்றுலாப்பயணிகளுக்காக பெறுமதிசேர் வரியில் புதிய சலுகை

சுற்றுலாப்பயணிகளுக்காக பெறுமதிசேர் வரியில் புதிய சலுகை

சுற்றுலாப்பயணிகளுக்காக பெறுமதிசேர் வரியில் புதிய சலுகை ஒன்று உள்வாங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘எமது நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் கொள்வனவு செய்கின்ற பொருட்களுக்கான பெறுமதிசேர் வரியில் 15 சதவீதத்தை மீளச்செலுத்துவதற்கான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கென விசேட கொடுப்பனவு மற்றும் பெறுவனவு நிலையமொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்படவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com