சுயேட்சையாக எமது மண்ணை அபிவிருத்தி செய்வோம் – க.கேதீஸ்வரநாதன்

க.கேதீஸ்வரநாதன்

சுயேட்சையாக எமது மண்ணை அபிவிருத்தி செய்வோம் – க.கேதீஸ்வரநாதன்

யாழ்ப்பாணம்30 ஆண்டுகளாக அந்த அரசியல் கட்சிகளும் அபிவிருத்தியை முன்னெடுக்காததினால், சுயேட்சையாக எமது மண்ணை அபிவிருத்தி செய்வோம் என கேடயம் சின்னத்தினை கொண்ட சுயேட்சைக்குழுவின் முதன்மை வேட்பாளர் க.கேதீஸ்வரநாதன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சைக்குழுவாக போட்டியிடுபவர்களைக் கண்டுகொள்ள வேண்டாமென தெரிவித்தமைக்கு விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நெடுந்தீவிற்கான அபிவிருத்திகள் சரியான வகையில் முன்னெடுக்கப்படவில்லை. வெளிநாடுகளைப் போன்று அடிப்படை வசதிகளுடன் வாழ வேண்டுமென்று தீவகம் சுவீட்சமான எதிர்காலத்தினை அடையும் வரை நாம் பயணிக்கவுள்ளோம். நெடுந்தீவு பின்தங்கிய பிரதேசமாகவே இன்றும் காணப்படுகின்றது.
அரசியல்வாதிகள் முக்கிய பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். அபிவிருத்தியை நடைமுறைப்படுத்த வேண்டிய மாகாண சபை கூட அக்கறைகாட்டவில்லை.

நெடுந்தீவு மண்ணில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. எமக்கு ஆதரவு கொடுத்தால், நெடுந்தீவில் 3 வருடங்களில் அபிவிருத்தியை நிறைவேற்ற முடியும். போக்குவரத்து பிரச்சினைகள், வீதிப் போக்குவரத்து, கடற்போக்குவரத்து நிரந்தரமான போக்குவரத்தாக அமைவதில்லை.

காலநிலை மற்றும் படகுகள் பிரச்சினை, கல்வி வளர்ச்சி பாதிப்பு நெடுந்தவில் இருந்து, தகுந்த ஊக்குவிப்புக்கள் இல்லை. வைத்தியர் ஒருவர் பல சிரமத்தின் மத்தியில் கடமையாற்றுகின்றார். நிரந்தர வைத்தியர் என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது. மீனவர் பிரச்சினை, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அனைத்துப் பிரச்சினைகளையும் அதிகாரிகளிடம் முன்வைத்த போதும் பதில் எதுவும் கிடைக்கவில்லை. பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

கேடயம் சின்னத்தில் 16 பேர் கொண்ட சுயேட்சையாகப் போட்டியிருக்கின்றோம். பதவிக்கு வந்தால், முடிந்தளவிற்கு, எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]