சுயாதீன குழுவாக செயற்பட அனுமதிக்குமாறு ஒன்றிணைந்த எதிரணி கோரிக்கை

ஒன்றிணைந்த எதிரணியை நாடாளுமன்றில் சுயாதீன குழுவாக செயற்பட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், ரஞ்சித் சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளதால் இந்த கோரிக்கையை விடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தக் கோரிக்கையை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு தரப்பாக கருதாது எதிர்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியின் 54 உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் உள்ளிட 70 பேர் சுயேற்சை குழுவாக இயங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]