சுயாதீனமாக இயங்குவதா இல்லையா – ரஞ்சித் சொய்சா

ரஞ்சித் சொய்சா

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின், கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு உரித்தானது என கருத்தக்கள் எழுந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதா இல்லையா என்பது குறித்த இறுதி தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்படவுள்ளதாக அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]