சுமந்­தி­ரன்-சம்­பந்­தன் சொல்வது பொய்யா? – சுரேஷ் பிரேமச்சந்­திரன்

சுமந்­தி­ரன்-சம்­பந்­தன்

சுமந்­தி­ரன்-சம்­பந்­தன் சொல்வது பொய்யா? – சுரேஷ் பிரேமச்சந்­திரன்

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சொல்­வது பொய்யா? சுமந்­தி­ரனும் சம்­பந்­தனும் சொல்­வது பொய்யா? ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சிங்­கள மக்­க­ளுக்கு தமது நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­து­கி­றார்கள். ஆனால் எங்­க­ளு­டைய தலை­வர்கள் தமிழ் மக்­களை கேலிக்­குள்­ளாக்கி ஏமாற்­று­கின்­றனர் என்று ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்­திரன் தெரி­வித்தார்.

தமிழ் தேசிய விடு­தலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பன வெளி­யீடு நேற்று நல்லூர் இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­ போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.அவர் மேலும் கூறு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் வட கிழக்கில் மாத்­தி­ர­மல்ல தென் பகு­தி­யிலும் முக்­கி­யத்­துவம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தென்­ப­கு­தியை பொறுத்­த­வ­ரையில் இத்­தேர்­த­லுக்கு பிற்­பாடு மைத்­திரி தொடர்ந்து ஆட்­சியில் இருப்­பதா? மைத்தி­ரியும் மஹிந்­தவும் கூட்டுச் சேர்­வதா அல்­லது மைத்திரி ரணில் கூட்டு தொடர்­வதா? போன்ற பல விட­யங்­களை தீர்­மா­னிக்­கக் ­கூ­டிய ஒரு தேர்­த­லாக தென்­ப­கு­தியில் பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மைத்திரி மஹிந்­த­விற்கு ஏற்­பட்ட இடை­வெளி கார­ண­மாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இரண்­டாக பிள­வு­பட்­டுள்ள நிலையில் அது ஒன்­றா­வதா அல்­லது புதிய கட்­சியில் பரி­ண­மிப்­பதா போன்ற பல விட­யங்ளைத் தீர்­மா­னிக்­கக்­ கூ­டிய தேர்­த­லாக உள்­ளது.

இதே­போன்றே வட­கி­ழக்­கிலும் இது­வரை நாங்கள் தான் ஏக பிரதிநிதிகள் அவர்கள் என்றும் ஏக பிர­தி­நி­தி­க­ளாக இல்­லா­விட்­டாலும் கூட இந்தத் தேர்தல் அதனை தீர்­மா­னிக்­க­போ­கின்­றது.

இந்தத் தேர்தல் இது­வ­ரை­ கா­லமும் இருந்­ததை விட வட கிழக்­கிலும் தமிழ் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்டு தமிழ் மக்­க­ளு­டைய ஆணையைப் பெற்று தமிழ்­ மக்­க­ளு­டைய உரி­மை­களை மீட்­டெ­டுப்போம் என்று போன­வர்கள் இதற்­காக என்ன விட­யங்­களைச் செய்­தார்கள் மக்­களை எவ்­வாறு ஏமாற்­று­கின்­றார்கள் என்­பதை தீர்­மா­னிக்கக் கூடிய தேர்­த­லாக இது இருக்­கின்­றது. ஆகவே இந்தத் தேர்தல் வட­கி­ழக்­கிலும் சரி தென்­னி­லங்­கை­யிலும் சரி முக்­கி­ய­மா­க­வுள்­ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]