சுப நேரத்தில் எதிர்க் கட்சி ஆசனத்தில் அமரவுள்ள 16 பேர்

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் எதிர்வரும் 19ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்றத்தில் சுபநேரத்தில் எதிர்க் கட்சி ஆசனத்தில் அமரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியி உறுப்பினர்களான இவர்கள், எதிர்க் கட்சியில் அமரவுள்ளமை முக்கிய அம்சமாகும்.

எனினும், அரசாங்கத்திலுள்ள அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தாலும் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியில் இணையப் போவதில்லையென முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]