சுப்ரமணியபுரம் சுவாதியின் தற்போதைய நிலை தெரியுமா? புகைப்படம் உள்ளே

சசிகுமார் டைரக்‌ஷனில் உருவான ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்வாதி. பின்னர் மீண்டும் சசிகுமாருடன் ‘போராளி’ படத்தில் நடித்தார். பெரிதாக ஹிட் படங்கள் அமையவில்லை. இதையடுத்து படவாய்ப்புகளும் குறைந்தன. இதனால் ஸ்வாதிக்கு வருமானம் குறைந்தது. செலவுக்கு பணம் இன்றி கஷ்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சுப்ரமணியபுரம் படத்தில் இடம் பெற்ற ‘கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்’ என்ற பாடலில் விழிகளால் ரசிகர்களை கவர்ந்தார்.போராளி திரைப்படம் எதிர்பார்த்த அளவு போகாததால், அடுத்து பட வாய்ப்பு எதுவும் இவர் வீட்டுக்கதவை தட்டவில்லை.போராளி கதை ரீதியாக நல்லா விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை.

கதாநாயகி வாய்ப்பு இல்லாத போதும், வாய்தமிழ், தெலுங்கில் சில படங்களில் கவுரவ தோற்றத்தில் வந்து தலைகாட்டி விட்டு போனார்.வடகறி படத்தில் கதாநாயகியாக நடித்தார்.அந்த படமும் அந்த அளவிற்கு சரியாக போகவில்லை.

இதுகுறித்து ஸ்வாதி கூறும்பொழுது, ‘சினிமாவில் நான் பெரிதாக சம்பாதித்துவிடவில்லை. நிறைய படங்களிலும் நடித்து இருந்தாலும் நடுத்தர குடும்ப சூழ்நிலையிலேயே இருக்கிறேன்.

சுப்ரமணியபுரம் சுவாதியின்

நான் ஆடம்பர பங்களாவில் வசிக்கவில்லை. பெற்றோருடன் சிறிய வீட்டில்தான் இருக்கிறேன். எனது தந்தை வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது. ஆடம்பர கார் என்னிடம் கிடையாது. குடும்பத்துக்கு பெரிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்’,என ஸ்வாதி கூறினார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தன் புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டிருந்தார். அதில் அவர் உடல் எடை சற்று கூடியிருந்தது தெளிவாக தெரிந்தது.இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]