சுந்தர். சியின் ‘இருட்டு’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

சுந்தர். சியின் ‘இருட்டு’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

இயக்குனரும் நடிகருமான சுந்தர். சி தற்போது ‘இருட்டு’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் V.Z. துரை இயக்கவுள்ள இந்த திரைப்படம் திரில்லர் திரைப்படமாக வெளிவரவுள்ளது.

இதற்கு முன்னர் V.Z. துரை முகவரி, தொட்டி ஜெயா, ஆறு, மற்றும் ஏமாளி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது.

திகில் கலந்த காமெடி படமான ‘அரண்மனையின’ படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் 85% படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சில காட்சிகள் ஐதராபாத் மற்றும் சூரத்தில் படமாக்கப்பட இருக்கிறது.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இப்படத்தில் இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

சுந்தர். சியின் 'இருட்டு'

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]