சுதந்திர தின வைபவத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

இலங்கையின் 69வது சுதந்திர தின வைபவத்தை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளன.
 
சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது.
கொழும்பில் நடைபெறும் வைபவத்திற்கு அமைவாக மாவட்ட மட்டத்திலும் சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களிலும் சுதந்திர தின வைபவம் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக  அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்