கல்விக்கான மாணவர் இயக்கமாக மாற்றமடைந்த சைட்டம்

சைட்டம் எதிர்ப்பு மாணவர் இயக்கம், சுதந்திர கல்விக்கான மாணவர் இயக்கம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் இவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, பெயர்மாற்றம் செய்யப்பட்டது தவிர்ந்த மேலும் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி உரிமையை ஏற்றுக்கொள்ளுதல், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்தல், பாடசாலை கல்வியில் நிலவும் பிரச்சினைகளை தீர்த்தல், தனியார் பல்கலைக்கழகங்களை இல்லாது செய்தல் உள்ளிட்ட 6 யோசனைகளே இதன்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]