‘சுதந்திர கட்சி’ உறுப்பினர்கள் தொடர்பில் தவறான தகவல்’

சுதந்திர கட்சி

ஸ்ரீலங்கா ‘சுதந்திர கட்சி’யின் மற்றுமொரு குழுவினர், அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வேண்டும் என்பதற்காக சிலர் அவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவ்வாறான கருத்துக்களில் உண்மையில்லை என்றும், இதற்கான பதில் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]