சுதந்திரக் கட்சியின் முடிவு ஏப்ரல் 4இல் தெரியும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் ஏப்ரல் 4ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.

இதனை கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இன்று தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் தமது கட்சி எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித கலந்துரையாடல்களும் கட்சிக்குள் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]