சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு 7 மணியளவில் இந்த கூட்டம் கூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக புதிய நிர்வாக அதிகாரிகளை நியமித்த பின்னர் நடக்கவுள்ள முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டம் இதுவாகும்.

இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]