சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் நிலைக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று இரவு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று ஐதேக போர்க் கொடி உயர்த்தியுள்ளது.

அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள், தாம் பதவியில் இருந்து விலக அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

இந்த நிலையில், இன்றிரவு நடக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இதுபற்றிய முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.