சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவில் இணைய மாட்டார்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 39 பேரில் எந்தவொரு உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ள போவதில்லை என, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கடசியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா யோசனைக்கு ஆதரவளித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் எதிக்கட்சியிவ் அமர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எனைய 23 உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]