சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் தேசிய அரசாங்கம் தொடரவேண்டும்

அரசாங்கத்தை பாதுகாக்க செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]