பொதுமக்களுக்கு சுகாதார பிரிவின் எச்சரிக்கை

மழை மற்றும் வெள்ள நிலைமையுடன், திடீர் விபத்துக்களும், நோய்களும் பரவக்கூடிய அனர்த்தம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனால் சிறுவர்கள் வெள்ளம் நிலவும் பிரதேசங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாமென்று சுகாதாரப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன், காய்ச்சல், இருமல் மற்றும் உடம்பில் கொப்பளங்கள் போன்ற நோய் குணங்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி பபா பலிஹவடன இதனை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]