சுகாதார அமைச்சுக்கு ரூ.9 இலட்சம் நட்டம்

சுகாதார அமைச்சின் சுவசிறிபாய கட்டடத்தின் மீது, நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக, சுகாதார அமைச்சுக்கு 9 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, தெரியவருகிறது.

மாலபேயிலுள்ள “சைட்டம்” தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ​மருத்துவபீட மாணவச் செயற்பாட்டாளர்களால், சுகாதார அமைச்சின் சுவசிறிபாய கட்டடம், நேற்று முன்தினம்  சுற்றிவளைக்கப்பட்டதுடன், தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மற்றும் குண்டாந்தடி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதனால், அப்பிரதேசமே அல்​லோல கல்லோலப்பட்டது. இதனால், 85 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இச்சம்பத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]