தீவகப் பகுதிக்கான வைத்தியர்களை நியமிப்பதில் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கணிசமான பங்களிப்பு உள்ளது – வடமாகாண சுகாதார அமைச்சர்

வடமாகாண சுகாதார அமைச்சர்

யாழ்ப்பாணம்; தீவகப் பகுதிக்கான வைத்தியர்களை நியமிப்பதில் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கணிசமான பங்களிப்பு உள்ளதென்பதனை மறந்துவிட வேண்டாம். வடமாகாண சபை மீதும், அமைச்சர்கள் மீதும் குறை கூறி அபிவிருத்திச் செயற்பாடுகளிற்கு எதிராக கருத்துக் கூறுவதை விடுத்து, வடமாகாண சபையின் செயற்பாட்டிற்கு பங்களிப்பு தருமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் குணசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் புங்குடுதீவு மாணவியின் விபத்துச் சம்பவத்தின் போது உயிரிழந்தார். அந்த விபத்தின் பின்னர் மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்த போது, புங்குடுதீவு வைத்தியசாலை வைத்தியர் இல்லாமல் இருந்தமையினால் தான் அந்த சம்பவம் இடம்பெற்றதென்றும், அதற்கு வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டுமென்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா கருத்துவெளியிட்டிருந்தார்.

அவரின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் இன்று (29)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவியின் விபத்துச் சம்பவத்தின் போது, புங்குடுதீவு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமைக்கான காரணம் தொடர்பான விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண சுகாதார அமைச்சரினால் வைத்தியரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் வைத்தியர்களையும் வைத்திய நிபுணர்களையும் நியமிப்பதற்கு மத்திய அரசுடன் போராட்டத்தினை நடாத்தி வருகின்றோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை தீவுப் பகுதியில் உள்ள வைத்தியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதென்பது பெரும் சிரமமாக இருக்கின்றது. தீவுப் பகுதிக்கான வைத்தியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் அனுப்பும் போது, தீவுப் பகுதிக்கான வைத்தியர்களுக்கான விண்ணப்பங்கள் அதிகளவு கிடைப்பதில்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களினால் செய்ய முடியாததை, அதே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கும் பொருந்தும் என்பதே உண்மை.

நாங்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான் என சொல்லிக்கொண்டிருக்கும் பாராளுமன்றஉறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உங்களுக்கும் கணிசமான பங்களிப்பு இருக்கின்றதென்பதனை மறந்துவிட முடியாது. இங்கு காணப்படும் வெற்றிடங்களை நிரப்ப முடியாதுள்ளனர் என எம்மைக் குறை கூறுவதை விடுத்து அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு மத்தியில் எதைப் பேசினீர்கள் என்று மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

வேண்டுமென்றே, வடமாகாண சபை மீதும், வடமாகாண சபை அமைச்சர்கள் மீதும், நிர்வாகம் மீதும் அபிவிருத்தி விடயங்கள் மீதும் கருத்துக் கூறுவதை நிறுத்திவிட்டு, மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவை என்பதனை யோசித்து நாங்கள் செய்யும் சேவைகளுக்கு பங்களிப்புச் செய்வதே பிரதி உபகாரமே தவிர, இவ்வாறான துன்பகரமான செய்திகளை வைத்து பத்திரிகைகளில் அறிக்கை விடுவது, மக்களை ஒரு போதும் உங்களுடன் இணைக்காது. மருத்துவம் தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]