சீ.டீ. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சென்றுள்ளார்.

இதனால், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]