சீரியலில் இருந்து விலகிய நிஷா கணேஷ் செய்த அதிரடி விஷயம்!

சீரியல்கள் தான் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும் ஏதோ போல் ஆகிவிடுவார்கள்.

வீட்டு பெண்களின் ரசனைக்கு ஏற்ப இப்போது பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில் ரசிகர்களிடம் தற்போது அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் என்றால் நெஞ்சம் மறப்பதில்லை. பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார் நிஷா கணேஷ். இதற்கான காரணத்தை நேற்று அவரது சமூக வலைதளத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நிஷா நீளமாக இருந்த தன் தலைமுடியை பாதியாக கட் செய்துள்ளார். அதோடு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவே இப்படி ஒரு விஷயம் செய்ததாகவும் உங்களுக்கும் (ரசிகர்கள்) இதில் விருப்பம் என்றால் தன்னை தொடர்ப்பு கொள்ளுங்கள் என்றும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]