‘நிவாரணங்களை வழங்க முப்படையினரும் தயார்’

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]