சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் காற்றுடன் மழை பெய்து வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருவதோடு, குறித்த மழைவீழ்ச்சி தொடர்ந்தும் நீடிக்குமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பிற்பகல் வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாலைவேளையில் கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசுமென தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கடலும் கொந்தளிப்பாக காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீனவர்களை கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]