சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டால் 1902 எனும் இலக்கத்திற்கு அறிவியுங்கள்

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவல் தருமாறு உள்நாட்டலுவல்கல் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இதற்கான தொலைபேசி இலக்கம் 1902 ஆகும்.
.
நாடு முழுவதிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இவர்களுக்கு துரிதமாக நிவாரண சேவையை வழங்குமாறும் பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்குமாறும் உள்நாட்டலுவல்கல் அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.