சீரற்ற காலநிலையினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் மலையகத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் மேல்கொத்மைலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று அதிகாலை முதல் திறந்து விடப்பட்டுள்ளன.

இதேவேளை, நோட்டன் விமலசுரேந்திர நீர்தேக்கத்திலும் நீர் நிரம்பி வழிவதுடன், காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கொசல்கமுவ ஓயா, டிக்கோயா ஆகிய ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டெவன் மற்றும் சென்கிளேயர் நீர் வீழ்ச்சியிலும் அதிகளவில் நீர் வழிந்தோடுவதாக கூறப்படுகின்றது.

மழையுடன் கூடிய பனி மூட்டம் நிலவும் நிலையில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், பிரதான பாதைகளில் மழை நீர் அடித்துச் செல்வதனால் பாதையில் வழுக்கல் தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் அதிக மழையினால் நீரேந்தும் பகுதிகளில் குடியிருப்போர் அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]