‘சீரற்ற காலநிலை’யால் 38,040 பேர் பாதிப்பு

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடும் மழையுடனான காலநிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 9,815 குடும்பங்களைச் சேர்ந்த 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையின் காரணமாக 237 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபோத்தாகம இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தில் 400 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]