சீரற்ற காலநிலையால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

சீரற்ற காலநிலையால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் அடைமழை பெய்துவருகின்றது.

மழை பெய்யும் நேரங்களில் இடியுடன் காற்றும் பலமாக வீசுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு களுத்துறை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பதோடு, பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேல், மத்திய, தென் மற்றும் ஊவா மகாணங்களில் பெய்துவரும் அடைமழை தொடர்ந்து நீடிக்கின்றதோடு, குறிப்பாக இன்று (புதன்கிழமை) கொழும்பு, இரத்மலானை, களுத்துறை, காலி, இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாவட்டங்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதோடு, 17 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்ற அதேவேளை, சுமார் 12,000 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் நாளை முதல் மழைவீழ்ச்சி குறைவடையலாமென வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வுகூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]