சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பட்டு வருகின்றது.

சீரற்ற காலநிலையால் இதுவரை சுமார் 17 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த 69 ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அனர்த்தங்களினால் 12 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்தியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அத்துடன், சேதமடைந்த வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்காக 25 இலட்சம் ரூபா வரை நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]